Loading...

அறிமுகம்

டாக்டர் பாரிவேந்தர் - ஓர் அறிமுகம்

கல்வி, அரசியல் மற்றும் சமூக சேவையில் உன்னத தலைவர்

வாழ்க பல்லாண்டு வள்ளல் பாரிவேந்தர்..

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, பல கஷ்டங்களையும், வேதனைகளையும் தாண்டி, மூன்றெழுத்தில் பல கல்வி சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கி உலகம் போற்றும் உன்னத தலைவராய் வலம் வருபவர் தான் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள்.

கல்வித் துறையில் பங்களிப்பு

"கல்வி தாழ் திறந்த கரிகாலனாய் படிப்புத் தந்த பாரி வள்ளலாய்"

ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்திலேயே தனது கல்வி நிறுவனங்களை அமைக்கத் தொடங்கியவர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளியை 1969 ஆம் ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற பெயரிலும் 1981 ஆம் ஆண்டு அதே பள்ளியை அடுத்த நிலையான உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தினார். பின் தன் தாயின் பெயரைக் கொண்டு 1984ஆம் ஆண்டு வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரியை நிறுவினார். 1985ஆம் ஆண்டு எஸ்.ஆர்.எம். என்ற மகிழ்மதியை எஸ்.ஆர்.எம். என்ற பொறியியல் கல்லூரியிலிருந்து தொடங்கினார். இதன் பின் மருத்துவம், பொறியியல், சட்டக் கல்வி, வேளாண்மை போன்ற எண்ணற்ற துறைகளிலும் கல்லூரி வாசலைத் திறந்து வைத்தவர். பல மாணவர்களின் கல்வியை மேம்படுத்தியவர்.

"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" - வள்ளுவர்

"இல்லை என்பது கல்வி இல்லாமையே, உடையவர் என்பவர் கல்வி உடையவரே.." - பாவேந்தர் பாரதிதாசன்

இத்தகைய சிறப்புமிக்க கல்வியை அளித்து கொண்டிருப்பது தான் நம் SRM பல்கலைக்கழகம். இந்த மாபெரும் பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் தான் நம் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் அவர்கள். தமிழ்நாடு, டெல்லி, ஆந்திரா, சிக்கிம் என்ற பல மாநிலங்களிலும் எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்தை நிறுவி கல்விச்சேவையை ஆற்றி வருகிறார். பல நாடுகளில் இருந்து ஆயிர கணக்கில் வருடம் தோறும் சேர்ந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

அரசியல் பங்களிப்பு

இது போன்ற கல்வியாளரை நிறுவனத்தலைவராக கொண்ட கட்சி இந்திய ஜனநாயகக் கட்சி. தமிழையும், தேசியத்தையும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டு வருபவர் தான் நம் உத்தமத்தலைவர் பாரிவேந்தர் அவர்கள். வருடந்தோறும் ஆயிரக்கணக்கில் ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வியை இலவசமாக வழங்கி வரும் மாபெரும் வள்ளல் பாரிவேந்தர் அவர்கள்.

கல்வியையும், மருத்துவம் மட்டுமே ஒருவருக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்ற உயரிய கொள்கை அடிப்படையில் இந்திய ஜனநாயகக் கட்சியை உருவாக்கி வழி நடத்திக் கொண்டு இருக்கின்றார். வருடந்தோறும் பல நூறு மக்கள் பயன்பெறும் வகையில் உன்னதமான இலவச மருத்துவச் சேவையை வழங்கி வருகிறார் பாரிவேந்தர் அவர்கள்.

தமிழ்ப் பணி

"முல்லைக்குத் தேர் கொடுத்தவர் சங்ககாலப் பாரி.. முத்தமிழுக்குத் தேர் கொடுப்பவர் நிகழ்கால பாரி நம் பாரிவேந்தர்.."

ஆம், எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராயம் என்ற அமைப்பை உருவாக்கி சாகித்ய அகாடமி விருதிற்கு இணையாக, அதனை விட அதிக பரிசுத்தொகையாக தமிழ் இலக்கிய, தொழில்நுட்ப விருதுகளை வழங்கி வருகிறார்.

இப்படி முத்தமிழை தமது மூச்சாக எண்ணும் தலைவரால் உருவான கட்சி இந்திய ஜனநாயகக் கட்சி.

ஜனநாயகக் கருத்துரு

மக்களுக்காக, மக்களால், மக்களிடம் இருந்து உருவாகும் ஆட்சி தான் ஜனநாயகம்.

மக்கள் தான் ஆட்சியின் மூலாதாரம்; அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் வழியாக அரசாங்கம் நடத்தப்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் சம உரிமை, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் அரசியல் அமைப்பு தான் ஜனநாயகம்..

அப்படிப்பட்ட ஜனநாயகத்தை காக்க கட்சி பெயரிலேயே ஜனநாயகத்தை வைத்து இந்திய ஜனநாயகக் கட்சியை உருவாக்கி அதில் உயரிய கொள்கையை வகுத்து செயலாற்றி வருபவர் தான் நம் பாரிவேந்தர் அவர்கள்.

Dr. பாரிவேந்தர்
முக்கிய விருது

பர்மிங்ஹாம் பல்கலைக்கழகம் - கௌரவ டாக்டர் பட்டம் 2019

முக்கிய சாதனைகள்
  • 1969: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பள்ளி
  • 1984: வள்ளியம்மை பாலிடெக்னிக்
  • 1985: எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரி
  • இலவச மருத்துவ சேவைகள்
  • தமிழ்ப்பேராயம் - தமிழ் விருதுகள்

IJK - கட்சியின் உயரிய கொள்கைகள்

மக்களுக்காக, மக்களால், மக்களிடமிருந்து உருவான ஆட்சி

தமிழில்
  • மது இல்லா தமிழ்நாடு
  • லஞ்சம் மற்றும் ஊழல் ஒழித்தல்
  • இலவசங்களை தவிர்த்தல்
  • விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்குதல்
  • பெண்களுக்கு சமவாய்ப்பு
  • விவசாயத்தில் விஞ்ஞானம்
  • பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு
  • அரசியல் பதவிகள் இருமுறை மட்டுமே
English
  • Liquor-free Tamil Nadu
  • Corruption-free Tamil Nadu
  • Avoiding Freebies
  • Farming family member as Chief Minister
  • Equal Opportunities for Women
  • Science in Agriculture
  • Economic-based Reservation
  • Two-term Political Positions

பாரிவேந்தர் அவர்களின் சமூகப் பணிகளில் சில துளிகள்

மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவரது சிறப்பான சேவைகள்

"நான் மகாத்மா காந்தி அல்ல. ஆனால் என் வாழ்விலும் பல சத்திய சோதனைகள் ஏற்பட்டுள்ளன" என்ற ஐயா பாரிவேந்தரின் கூற்றிற்கு இணங்கச் சிறு வயதிலிருந்து பல்வேறு சோதனைகளைக் கடந்து இன்று பல சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் நம் ஐயா, சாதாரண பச்சமுத்தாகப் பிறந்து இன்று பார்போற்றும் பாரிவேந்தராக உள்ள ஐயாவின் சேவைத்துளிகள் இதோ:

  • மக்கள் பணியில் இறங்கிய முதலிலேயே பெரம்பலூரில் உள்ள 100 அரசுப் பள்ளிகளுக்கு ரூபாய் பத்து இலட்சம் மதிப்புள்ள கணினிகள் வழங்கினார்.
  • ஒவ்வொரு வருடமும் அவர் பிறந்த நாள் அன்று 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உபகரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
  • பெரம்பலூர் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க எஸ்.ஆர்.எம். அறக்கட்டளையிலிருந்து ஒரு கோடி நிதி வழங்கியிருக்கிறார். மேலும் 3 கிராமங்களுக்குத் தன் சொந்தச் செலவில் போர்வெல் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
  • பெரம்பலூர் தொகுதியில் 2020-ல் ஏற்பட்ட வறட்சிக் காலத்தில் குடிநீர் பிரச்சனை தீர்க்கத் தன் சொந்தச் செலவில் குடிநீர் லாரிகளை அனுப்பினார்.
  • திருச்சி, துறையூரில் மினி வேன் டயர் வெடித்து 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த குடும்பத்திற்குத் தலா ரூ.1 இலட்சம் தன் சொந்தச் செலவில் வழங்கினார். மேலும் அவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் கல்விச் செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார்.
  • கொரோனா காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 11 பேர் அயல்நாட்டில் பணி இழந்து தாயகம் செல்ல இயலாமல் தவித்தபோது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பத்திரமாகத் தாயகம் செல்ல வழிவகை செய்தார்.
  • கொரோனா காலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர், ஆம்புலன்ஸ் வசதிகள் என அனைத்தையும் தனது சொந்த செலவில் செய்தார்.
  • பல தமிழுக்காக பாரிவேந்தர் தமிழ்மன்றம் உருவாக்கிப் தமிழறிஞர்களுக்கு விருதுகளையும், ஊக்கத்தொகையையும் கொடுத்துக் கெளரவப்படுத்தி வருகிறார்.
  • பல ஆயிரம் ஏழை மாணவர்கள் இவரின் கல்வி உதவித்தொகை பெற்று இலவசமாகப் படித்து வாழ்க்கையில் உயர்ந்துள்ளனர்.
  • எஸ்.ஆர்.எம். மருத்துவமனை மூலம் பல்வேறு கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்தி ஏழை மக்கள் பயன்பெறும்படி செயல்பட்டு வருகிறது.
  • 2019 நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியின்படி பெரம்பலூர் தொகுதியில் உள்ள மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு மொத்தம் 1200 மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இலவசக் கல்லூரி வாய்ப்பை வழங்கியுள்ளார்.
  • மேலும் அவருடைய பல்கலைக்கழகத்தில் உயர்கல்விக்கு வசதியில்லாத மாணவர்களுக்கு வழிகாட்டும் பல்வேறு அறக்கட்டளை மூலம் கல்வி பெறும் மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வாய்ப்பை வழங்கி வருகிறார்.