இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர்
இந்திய ஜனநாயகக் கட்சியை நவீன தளத்திற்கு கொண்டு சென்ற பெருமை இளையவேந்தர் திரு. ரவிபச்சமுத்து அவர்களுக்கு உண்டு. இளம் வயதிலேயே பல சாதனைகளை நிகழ்த்தி, வெற்றி மற்றும் புகழ் பெறும் முனைப்பில் அரசியல் மற்றும் சமூக துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தனது தந்தையார் அய்யா டாக்டர் பாரிவேந்தர் அவர்களுடன் இணைந்து கல்வித்துறையில் பணியாற்றி, வள்ளியம்மை பொறியியல் கல்லூரி தொடங்கி, இன்று உலகப்புகழ் பெற்ற SRM பல்கலைக்கழகம் உருவாகும் வரை முக்கிய பங்கு வகித்தார்.
தற்போது SRM குழுமத்தின் Chairman, ஹரியானா மாநில சோன்பட்டில் உள்ள SRM பல்கலைக்கழகத்தின் வேந்தர் (Chancellor), மற்றும் சென்னை காட்டாங்குளத்தூர் தலைமையிடமாக இயங்கும் SRM பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் (Pro Chancellor) ஆகவும் பணியாற்றி வருகிறார்.
கல்வி, மருத்துவம், வணிகம், ஊடகம் போன்ற பல துறைகளில் முன்னேற்றம்
SRM குழுமத்தின் கல்வி துறையை மேம்படுத்த பல்வேறு கல்லூரிகளை நிறுவினார். உலகத் தரத்தில் SRM பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.
சென்னை வடபழனியில் SIMS மருத்துவமனை நிறுவி, 400 படுக்கைகள் கொண்ட உலகத் தர சேவைகளை வழங்கி வருகிறார். மேலும், 1500 படுக்கைகள் கொண்ட மூன்று மருத்துவக் கல்லூரிகளையும் நடத்தி வருகிறார்.
சென்னை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ஆறு உயர்தர ஹோட்டல்களை நடத்தி வருகிறார். SRM Transport மற்றும் SRMPR Railways மூலம் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகிறது.
மக்களுக்கு உண்மையான செய்திகளை வழங்கும் நோக்கில் வேந்தர் TV தொலைக்காட்சி நிறுவப்பட்டது. அரசியல், சமூக விழிப்புணர்வை உயர்த்தும் முக்கிய பங்களிப்பு இது.
IJK கட்சியில் முக்கிய பங்களிப்பு மற்றும் தேர்தல் சாதனைகள்
2015 பிப்ரவரி மாதத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.
2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2022 மாநகராட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் திறம்பட செயலாற்றி, IJK வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற வழிவகுத்தார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் அய்யா டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் பெரம்பலூர் தொகுதியில் எம்.பி ஆக வெற்றி பெற இவரின் அரசியல் வியூகங்கள் முக்கிய பங்காற்றின.
எதிர்வரும் காலங்களில், இளையவேந்தர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் தலைமையில் இந்திய ஜனநாயகக் கட்சி மிகப்பெரும் வெற்றிகளைப் பெற்று, அரசியலில் சிறப்பான இடத்தைப் பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
Powered by iPOT Technologies