• காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசின் அணைக்கட்டும் திட்டத்தை தடுத்த நிறுத்த தமிழக முதல்வர் அழுத்தம் தர டாக்டர் பாரிவேந்தர் எம்.பி.வலியுறுத்தல்

  நடந்து  முடிந்த  கர்நாடக  சட்டமன்ற  தேர்தலில்  காவிரியின்  குறுக்கே மேகதாது  அணைக்கட்டும்  திட்டத்திற்கு  ரூபாய்  9000 கோடி ஒதுக்குவதாக அகில  இந்திய  காங்கிரஸ்  கட்சி  தேர்தல்  அறிக்கையில் தெரிவித்திருந்தது.

   

  இப்பொழுது காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கும் நிலையில் மேகதாதுவில் தேர்தல் வாக்குறுதிப்படி அணைக்கட்ட முயற்சி செய்யலாம் என்பதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட காவிரி பாயும் அனைத்து பகுதிகளிலும் தமிழக மக்களின் குடிநீர் ஆதாரத்தையும் அதன் மூலம் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்த திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தடுத்த நிறுத்திட அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் தோழமை கொண்டிருக்கும் தமிழக முதல்வர் அவர்கள் கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டுமென இந்திய ஜனநாயக கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

   

   

   

  அன்புடன்

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி