• இன்று 69 –ஆம் ஆண்டு பிறந்தநாள் காணும் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து

  இன்று பிறந்தநாள் காணும் அதிமுக பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  தனது இளம் வயதில் தொடங்கி இன்றுவரை வெற்றிகரமாக தன்னுடைய அரசியல் பாதையை வகுத்துக்கொண்டவர் திரு.பழனிச்சாமி அவர்கள். அவர் நீண்ட ஆயுளோடும் – ஆரோக்கியத்தோடும் இருந்து,  மேன்மேலும் அரசியல் பணியில் மக்கள் சேவையாற்றவேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

   

   

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி

  நிறுவனர் - இந்திய ஜனநாயகக் கட்சி