• ஐஜேகே மேல்நடவடிக்கைக் குழு

    இந்திய ஜனநாயக கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கிடையே உள்ள சிறுசிறு  பிரச்சனைகள்  மற்றும் கருத்துவேறுபாடுகளை தீர்க்கவும் -  கட்சியின் வளர்ச்சியை வேகப்படுத்தவும் புதியதாக  நான்கு பேர் கொண்ட "ஆலோசனை / கருத்துகேட்பு மற்றும் குறைதீர்ப்பு குழு" உருவாக்கப்பட்டு,  அக்குழுவின் பொறுப்பாளர்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பொறுப்பாளர்களை சந்திப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைவதோடு, இக்குழுவினை உருவாக்கிய தலைவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். 

      மேற்படி  குழு  கட்சியில் உள்ள மாநில, மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், வார்டு நிர்வாகிகளுக்கிடையே, கட்சி சார்ந்த பிரச்சனைகள் ஏதேனும் இருப்பின் அவற்றினை நிர்வாகிகளுடன் கலந்துரையாடி,  அப்பிரச்சனைகள் பற்றிய அறிக்கையினை  நான் (நிறுவனத்தலைவர் டாக்டர் பாரிவேந்தர்), தலைவர் இளையவேந்தர் டாக்டர் ரவிபச்சமுத்து மற்றும் பொதுச்செயலாளர் திரு.பி.ஜெயசீலன் உள்ளடங்கிய தலைமையின் மேல்நடவடிக்கைக் குழுவிடம் சமர்ப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

     

     

    அன்புடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P

    நிறுவனத்தலைவர் - IJK