• மாமல்லபுரம் விபத்தில் பலியான 6 பேரின் மறைவிற்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் M.P இரங்கல்

  சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து மாமல்லபுரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிர்திசையில் வந்த ஆட்டோ பேருந்தின்மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியதில்  சம்பவ இடத்திலேயே குழந்தைகள் – பெண்கள் உள்ளிட்ட ஆறு  பேர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தத்தையும் - வேதனையையும் அளிக்கின்றது.

   கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துள்ள இக்கோர விபத்தில் பலியான அனைவரின் குடும்பத்தினருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன். 

   

   

  வருத்தங்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.