• நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் இயக்குநர் திரு.மனோபாலா இயக்குநரும் - நடிகருமான திரு.மனோபாலாவின் மறைவிற்கு டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் விடுத்திருக்கும் இரங்கல் செய்தி

  இயக்குநர்-தயாரிப்பாளர்- நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் – சிறந்த ஓவியர் என பன்முகத்திறமைகளை உள்ளடக்கிய திரு.மனோபாலா அவர்கள் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று காலமானார் என்கிற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும்-வருத்தமும் அடைந்தேன்.

  1980-ஆம் ஆண்டில் தமிழ்த்திரையுலகில் நுழைந்து,  திரைப்பட இயக்குநராக மட்டுமின்றி நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களின் மனங்களைக் கவர்ந்தவர். முன்னணி நாயகர்களை இயக்கி பல வெற்றிப்படங்களை கண்டதோடு, அனைத்து தரப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளும் வகையில் படங்களை இயக்கியவர். அத்தகைய சிறப்பியல்புகளைக்கொண்ட திரு.மனோபாலா அவர்கள் அவருடைய  69 வயதில் இறைவனடி சேர்ந்தார் என்பது தமிழ்த்திரையுலகிற்கும்-ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.

  அவரது இழப்பால் வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கும்-திரையுலக நண்பர்களுக்கும் – ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் -வருத்தத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரின் ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகின்றேன்.

   

   

  வருத்தங்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி