• இயக்குநரும் – நடிகருமான திரு.மனோபாலா அவர்களின் மறைவிற்கு - IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்கள் இரங்கல் –

  தமிழ் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், சிறந்த நடிகருமான திரு மனோபாலா அவர்கள் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைகின்றோம்.

   தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி கன்னடம் – இந்தி போன்ற 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியவர்.  மேலும் சிறந்த நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகராகவும் இருந்து திரையுலகிற்கு புகழ்சேர்த்த திரு.மனோபாலா அவர்களின் மறைவு தமிழ்த்திரையுலக நண்பர்களுக்கும். ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.

   அன்னாரின் திடீர் மறைவால் அவரை இழந்து வாடும் திரு.மனோபாலா அவர்களின் குடும்பத்தினருக்கும் – திரையுலக நண்பர்களுக்கும் – ரசிகர்களுக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

   

   

  வருத்தங்களுடன்,

  டாக்டர் ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)