• ஐஜேகே தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் - மே தின வாழ்த்துச் செய்தி

  உழைப்பாளிகளின் பெருமையை உலகெங்கும் உரைத்திடும் உன்னதத் திருநாள் மே தினம். உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டபூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்த நாள். உழைப்புக்கேற்ற ஊதிய மின்மை, கொத்தடிமைத் தனமான இன்னல்கள் ஆகியவற்றில் இருந்து தொழிலாளர்களுக்கு விடுதலை கிடைத்த தினம் மே தினம்!

  நாட்டின் வளர்ச்சிக்காவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் தங்கள் உதிரத்தை வியர்வையாக சிந்தி உழைந்திடும் தொழிலாளர் பெருமக்கள் அனைவரும்,  எல்லா நலன்களையும் – வளங்களையும் பெற்று வாழ வேண்டும் என வாழ்த்துவதோடு, உழைக்கும் மக்களுக்கு உரிய பாதுகாப்பையும் – வாழ்வாதாரத்தையும் அமைத்துத் தருவதில் துணை நிற்போம் எனக்கூறி, இந்நன்னாளில் தொழிலாளர் சமுதாயத் தோழர்களுக்கும், அவர்தம் குடும்பத்தார்க்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எனது இதயம் கனிந்த மேதின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

   

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் ரவிபச்சமுத்து‘

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)