• உரிமைகளை வென்றெடுக்க போராடிய‘உழைக்கும் வர்க்கத்தினர் அனைவருக்கும் மே – தின வாழ்த்து’டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் விடுத்திருக்கும் மே தின வாழ்த்துச்செய்தி

  இந்த உலகை உருவாக்கிய உழைப்பாளிகள் மற்றும் தொழிலாளிகள் வர்க்கம் தமது உரிமைக்காக போராடி வெற்றிபெற்ற திருநாள்தான் “மே“ தினமாகவும் – தொழிலாளர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் வாழும் தொழிலாளர்கள் என்கின்ற பிரம்மாக்களுக்கு இந்த மே – தினமானது நெற்றி வியர்வை மகுடம் சூட்டும் வெற்றி திருநாளாகும்.

  உழைக்கும் கைகள் ஒன்றுசேர்ந்தால் – உலகம் உறங்காது என்ற உரத்த சிந்தனையை உலகிற்கு உதிர்த்த இந்நாளில், நம் நாட்டை சமூகம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா நிலைகளிலும் வளர்ச்சி அடைந்ததாக மாற்ற, தொடர்ந்து உழைப்போம் எனக்கூறி உழைக்கும் வர்க்கத்தினர் அனைவருக்கும்  எனது உளம் கனிந்த மே – தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

   

   

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி