• ‘இஸ்லாம் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் மனித சமுதாயம் அனைத்திற்கும் பொருந்தும் வாழ்க்கை நெறியைப் போதித்தவர் நபிகள் நாயகம்’ டாக்டர் பாரிவேந்தர் M.P. ரம்ஜான் திருநாள் வாழ்த்து

     

    இஸ்லாமியர்களுக்கு ரமலான் மாதம் புனிதமானது. இம்மாதத்தில்தான் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பினை மேற்கொள்கின்றனர். பசிப்பிணியின் தன்மை பற்றி அனுபவப்பூர்வமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்நோன்பு அளிக்கிறது. பசித்திருந்து – தனித்திருந்து - விழித்திருந்து இறைவனை நினைத்திருந்து நோன்பெனும் மாண்பைத் தழுவும் இஸ்லாமியப் பெருமக்கள் ‘ஈதுல் ஃபிதர்’ என்னும் திருநாளைப் பெருநாளாகக் கொண்டாடும் நன்னாள் இன்னாள்.

    இந்நோன்பின் மூலம் வறுமையை ஒழிப்பதற்கும், ஏழைகளுக்கு உதவுவதற்கும் உரிய கடமை வலியுறுத்தப்படுகிறது. இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதன் மூலம் சமூக அமைதியையும், ஒற்றுமையையும் நிலைநாட்ட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர் நபிகள். இஸ்லாம் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் மனித சமுதாயம் அனைத்திற்கும் பொருந்தும் வாழ்க்கை நெறியைப் போதித்தவர் அண்ணல் நபிகள் பெருமான்.

    அத்தகைய பெருமை வாய்ந்த ஈகைத் திருநாளான ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும், உலகெங்கும் உள்ள என் அன்பிற்குரிய இஸ்லாமியப் சகோதர – சகோதரிகள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

     

     

    வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P,

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி