• "கலை – இலக்கியம் – பண்பாட்டில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள்" IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் தமிழ்புத்தாண்டு வாழ்த்துச்செய்தி –

  உலகின் தொன்மையான பண்பாட்டிற்கு சொந்தக்காரர்களாக விளங்கியவர்கள் தமிழர்கள்.   கலை, பண்பாடு, அரசு நிர்வாகம், உலக அளவிலான வணிகம், வான சாஸ்திரம், கட்டுமான நுண்ணறிவு என அனைத்து துறைகளிலும் முன்னோடியாக விளங்கியவர்கள் தமிழர்கள்.   அத்தகு சிறப்பு வாய்ந்த தமிழர்களின் தமிழ் புத்தாண்டின் வரிசையில் சுபகிருது ஆண்டு நிறைவடைந்து, சோபகிருது ஆண்டு நாளை (14/04/2023) பிறக்கவிருக்கின்றது.

   

  நாளை,  அண்ணல் அம்பேத்கா் பிறந்த நாளில்,  அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழி நடப்போம் என்று உறுதி ஏற்பதோடு,  காலம் முன்னிறுத்தும் கடமையினை நிறைவேற்ற புத்தாண்டில் உறுதியேற்போம் எனக்கூறி,  தமிழ் கொண்டாட்டங்களின் தொடக்கமாக அமையும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும்  இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எனது நெஞ்சம்  நிறைந்த  தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

   

   

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)