• ஐஜேகே தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் யுகாதி திருநாள் வாழ்த்துச் செய்தி

    பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வோடு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்து சகோதர, சகோதரிகளாய் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

      அதுமட்டுமின்றி, தொழில், வணிகம், கல்வி, கலை போன்ற பல்வேறு    துறைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவது  தமிழ்நாட்டிற்குப்  பெருமை சேர்ப்பதாக இருக்கின்றது.

      நாளை (22.03.2023) பிறக்கவுள்ள தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதித்திருநாள், அனைவரது வாழ்விலும் வளம் - நலம் மற்றும்  வெற்றிகளை வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று கூறி,  தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் அனைவருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எனது இதயம் கனிந்த ‘யுகாதி’ திருநாள் நல்வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறேன்.