• டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் விடுத்திருக்கும் ‘யுகாதி’ திருநாள் வாழ்த்துச் செய்தி

    தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் பெருவாரியாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் உழைப்புக்கும், பிறமொழி மக்களோடு குறிப்பாக தமிழர்களோடு பாசத்துடனும், பழகும் நட்புறவுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள்.

     பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. இதுபோன்ற பண்டிகைகள், பாரம்பரிய புத்தாண்டின் தொடக்கத்தை குறிப்பதோடு, நாட்டின் கூட்டு கலாச்சாரம் மற்றும் வளமான பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கின்றன. ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானா மக்கள் இதை ‘உகாதி’ எனவும் மற்றும் கர்நாடக மக்கள் 'யுகாதி' எனவும் அழைக்கின்றனர்.

    இந்நன்னாளில், நமக்குள் சகோதரத்துவம், அர்ப்பணிப்பு உணர்வை மேம்படுத்தி நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச்செல்ல உறுதியேற்போம் எனக்கூறி, உலகெங்கும் வாழும் அனைத்து தெலுங்கு மொழிபேசும் மக்களுக்கும் எனது உளம்கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

     

    வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.