• “வீட்டை ஆள்வதில் தொடங்கி நாட்டை ஆள்வது வரை சிறப்புடன் வழிநடத்துபவர்கள் மகளிர்” டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் விடுத்திருக்கும் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

  மகளிரின் முக்கியத்துவத்தையும் ,  மகளிருக்கு சமத்துவமும் ,  சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

   

  முந்தைய காலம்போல்  இல்லாமல்,  வீட்டை ஆள்வதில் தொடங்கி நாட்டை ஆள்வது வரை அனைத்திலும் மகளிருக்கு சமத்துவமும் ,  சம உரிமையும் வழங்கப்பட்டு  வருகின்றது .  குறிப்பாக  நமது பாரதப்பிரதமர்  திரு.நரேந்திரமோடி அவர்களின் தலைமையில்,குடியரசு தலைவர் முதல் நிதியமைச்ச ர் வரை முக்கிய பதவிகளில்  பெண்களே  கோலோச்சுகின்றனர்.

   

  இவ்வாறு பல்வேறு துறைகளில் சாதனைகளைப் படைத்துவரும் மகளிரக்கு அனைத்து வகைகளிலும் சிறப்புடன்செயல்பட உறுதுணையாக இருப்போம் எனக்கzறி, இந்திய ஜனநாயகக் கட்சியின் மகளிரணி பொறுப்பாளர்களுக்கும் , மற்றும் உலகெங்கும் வாழும் அனைத்து மகளிருக்கும் எனது உளம்கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

   

   

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி