• ‘அன்பில் மென்மையும் – காரியத்தில் வலிமையும் கொண்ட சிறப்புமிக்கவர்கள் மகளிர்’ ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்களின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி –

  மென்மையான குணமும், எடுக்கும் காரியத்தில் மன வலிமையும் கொண்ட புதுமைதான் பெண்மை. உலகம் முழுவதும் உள்ள பெண்களை சிறப்பிக்கும் வகையில் , ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ந் தேதி 'சர்வதேச மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது . பெண்களின் சாதனைகளை உலகிற்கு எடுத்துரைப்பது ,  சவால்களை அங்கீகரிப்பது  பெண்களுக்கான உரிமைகளில் அதிக கவனம் செலுத்துவது போன்றவை இந்த நாளின் நோக்கமாக கருதப்பட்டு வருகின்றது.

   

  தாய்மைக்கு இலக்கணமாய் திகழும் பெண்கள், தன்னம்பிக்கையுடனும் , விடாமுயற்சியுடனும் , வாழ்வில் சந்திக்கும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, அவற்றை வெற்றிப்படிகளாக்கி ,  சரித்திரம் படைத்திட வேண்டும் என வாழ்த்துவதோடு, அதற்கு நாமும் உறுதுணையாய் இருப்போம் எனக்கூறி  இந்நன்நாளில் உலகெங்கும் உள்ள அனைத்து மகளிருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் மகளிர் தின நல்வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கின்றேன். 

   

   

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் ரவிபச்சமுத்து

  தலைவர் 

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)