• நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர் மயில்சாமி நடிகர் மயில்சாமி அவர்களின் மறைவிற்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் MP இரங்கல்

  தனது தனித்திறமையால்  நகைச்சுவை நடிப்பில் தமிழ்த்திரையுலகில் பல உள்ளங்களைக் கவர்ந்த நடிகர் திரு.மயில்சாமி அவர்கள், இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறைனடி சேர்ந்தார் என்கிற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

         நகைச்சுவை என்ற ஒன்றால் எப்படிப்பட்ட மனிதனின் மனமும் சமநிலைக்கு வந்துவிடும்.  ஒருசிலருக்கு மட்டுமே அப்படிப்பட்ட நகைச்சுவை உணர்வின் மூலம் மற்ற மனங்களைக் கவரமுடியும்.  அவர்களுள் ஒருவர் திரு.மயில்சாமி.  நகைச்சுவை நடிகர் என்பதோடு, சமூக ஆர்வலராகவும்,  அரசியலிலும் ஈடுபாடு உடையவர்.  2021 சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டவர். அவரின் இழப்பு மிகவும் வருத்தமளிக்கின்றது.

         திரு.மயில்சாமி அவர்களின் மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் – உறவினர்களுக்கும் – நண்பர்களுக்கும் – திரையுலகினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

   

   

   

  வருத்தங்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி