• நகைச்சுவை நடிகர் மயில்சாமி அவர்களின் மறைவிற்கு IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் இரங்கல் செய்தி

  பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக  மறைந்தார்  என்கிற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். 

        1984-ல்  தமிழ் திரையுலகத்தில் அறிமுகமாகி,  பின்னர்  நடிகர் – நிகழ்ச்சி தொகுப்பாளர் – சமூக சேவகர் என பன்முகங்களில்  மக்களை கவர்ந்தவர்.  நகைச்சுவை மட்டுமல்லாது குணசித்திர வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.   ஆன்மீகத்திலும் – அரசியலிலும் நாட்டமுடையவர்.

        அன்னாரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் – உறவினர்களுக்கும்  –  திரையுலக நண்பர்களுக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில்  என்னுடைய ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகின்றேன்

   

   

   

   

   

  வருத்தங்களுடன்,

  டாக்டர் ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)