• மத்திய அரசின் 2023 – 24-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அனைவருக்கும் – அனைத்தும் என்ற நல்ல நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் வரவேற்பு

    2023-24  ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை, மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்கள் இன்று (01.02.2023) நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து 5-வது ஆண்டாக தாக்கல் செய்துள்ளார்.

    முக்கியமாக நம் நாட்டின் விடுதலைக்குப்பின்னர்,  நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசுத்தலைவராக திருமதி திரௌபதி முர்மு அவர்கள் உரையாற்ற, இன்று நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்கள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இருவருமே மகளிர் என்ற முக்கிய நிகழ்வாக இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் அமைந்தது.

     இன்று வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில்,

    Ø  தனிநபர் வருமானத்திற்கான வருமானவரி உச்சவரம்பு 5 லட்சத்திலிருந்து 7 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது

    Ø  விவசாயத் துறையில் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவதற்கு முன்னுரிமை,

    Ø  சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை,

    Ø  நாடு முழுவதும் 157 புதிய செவிலியர் பயிற்சிக்கல்லூரிகள் உருவாக்க திட்டம்

    Ø  வரும் நிதியாண்டில் ரூ.20 லட்சம் கோடி விவசாயக் கடன் இலக்கு,

    Ø  சுற்றுலா துறையை மேம்படுத்த நவீன செயலி அறிமுகப்படுத்தப்படும்

    Ø  குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும்.

    போன்ற திட்டங்களுடன், அனைவருக்கும் அனைத்தும் என்ற எதிர்பார்ப்புகளுடன் தயாரிக்கப்பட்டதாகவே இந்த நிதிநிலை அறிக்கை அமைந்ததாகக் கருதுகின்றேன். நாட்டின்  வளர்ச்சியை மையமாகக் கொண்டு, நவீன இந்தியாவை உருவாக்கும்  நோக்கத்தோடு தயாரிக்கப்பட்ட இத்திட்டங்களை செயல்வடிவத்திற்கு கொண்டுவருவதற்காக, முனைப்பான முயற்சிகளை மக்களின் ஒத்துழைப்போடு மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

     

     

     

     

    அன்புடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி