• ஐஜேகே தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் குடியரசு தின வாழ்த்துச் செய்தி

  உலகின் மற்ற நாடுகளுக்கு மத்தியில், மக்களாட்சி நடக்கிற பெரிய நாடு என்கிற பெருமிதத்தை நமக்கு தந்திருப்பது நமது ஜனநாயகம்தான். எந்தப் பேதமும் பார்க்காமல் இந்நாட்டின் குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்கிற நம் அரசியலமைப்பு முறைதான் நம் நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.

   தம் வாழ்நாட்களின் பெரும்பகுதியை நாட்டிற்காக அர்ப்பணித்து, இத்தகைய மகத்தான அரசியலமைப்பை உருவாக்கித் தந்த நம் மகத்தான தலைவர்களுக்கு இந்த நேரத்தில் நமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, விவசாயம், கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் முழுமையான, நிறைவான வளர்ச்சி பெறவும், அனைத்து வேறுபாடுகளையும் மறந்து அர்ப்பணிப்பு உணர்வோடு கடமையாற்ற நம்முடைய ஒருங்கிணைந்த ஆற்றல் அனைத்தையும் நமது நாட்டின் வளர்ச்சிக்காக முழுமையாக அர்ப்பணித்திட இந்நன்னாளில் உறுதி எடுத்துக்கொள்வோம் எனக்கூறி, உலகெங்கும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் என்னுடைய குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.  

   

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)