• பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் விடுத்திருக்கும் குடியரசு தின வாழ்த்துச் செய்தி

  நாட்டின் 74-வது குடியரசு தின விழாவினை கொண்டாடவுள்ள நாம், இந்திய அரசியலமைப்பு உருவாவதற்கு உன்னதப் பங்களிப்பு செய்த விடுதலைப் போராட்ட வீரர்கள், சட்டம் இயற்றிய மேதைகள் யாவரையும் நன்றியுடன் இத்தருணத்தில் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்.

  ஜனநாயகத்தைக் கொண்டு தேசத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான பணிகளில் ஈடுபடுவதோடு,   வலிமை – அமைதி - பொருளாதார வளம் -  சமூக முன்னேற்றம் மற்றும் கலாச்சார துடிப்புமிக்க இந்தியாவை உருவாக்க  இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தனது பங்களிப்பை அளிக்க உறுதியேற்போம் எனக்கூறி, உலகெங்கிலும் வாழும்  இந்திய மக்கள்  அனைவருக்கும் எனது மனமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

   

   

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி