-
‘இயற்கையுடனான நமது பிணைப்பு மேலும் அதிகரிக்கவேண்டும்’ ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்களின் - பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி
உழைக்கும் மக்கள், தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும் – சூரியனுக்கும் - தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தங்களது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.
உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை, மார்கழியில் தங்களது இல்லங்களுக்குக் கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். மொத்தத்தில் பொங்கல் விழா உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் திருநாளாகும்.
இயற்கையை போற்ற வேண்டும். இயற்கையுடன் இணைந்து வாழவேண்டும் என்பதுதான் பொங்கல் திருநாள் நமக்கு சொல்லும் செய்தி. மனிதனுக்கும் இயற்கைக்குமான பிணைப்பு எப்போதும் வளத்தையும் – நலத்தையும் மட்டுமே அளிக்கும். எனவே இயற்கையுடனான நமது பிணைப்பினை மேலும் அதிகரித்து, வளமான தமிழகத்தை உருவாக்குவோம் எனக்கூறி, மங்கலப் பொங்கல் திருநாளை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வாழ்த்துக்களுடன்,
டாக்டர் ரவிபச்சமுத்து
தலைவர்
இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)