• ‘நாட்டிலுள்ள அனைத்து துறைகளும் செழித்தோங்கி மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைந்திட நாளை பிறக்கட்டும் புத்தாண்டு 2023 டாக்டர். பாரிவேந்தர் M.P, ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

  புத்தாண்டை மகிழ்ச்சியுடனும் – எழுச்சியுடனும் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  மாற்றம் ஒன்றே மாறாதது என்பதுதான் இயற்கையின் நியதி. அந்த வகையில் 2022-ஆம் ஆண்டு முடிவுற்று, நாளை 2023–ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது.

  கடந்த ஆண்டில் ஏற்பட்ட சோதனைகளை மறந்து சாதனைகளைப் படைக்கும் ஆண்டாக 2023-ஆம் ஆண்டு அமையட்டும். புத்தாண்டின் தொடக்கத்தில் பழைய நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்று, வருங்காலத்திற்காக சிறப்பாகத் திட்டமிட்டு நாட்டை முன்மாதிரியாகக் கொண்டு செல்வோம். 

  இந்த புதிய வருடத்தை திறந்த இதயத்தோடும், மனத்தோடும் ஏற்றுக்கொண்டு வலிமையான தமிழகத்தை உருவாக்குவோம். நாட்டிலுள்ள அனைத்து துறைகளும் செழித்தோங்கி மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைந்திட நாளை பிறக்கட்டும் புத்தாண்டு 2023,  எனக்கூறி, உலகெங்கும் உள்ள அனைத்து சகோதர – சகோதரிகளுக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி