-
IJK தலைவர் டாக்டர். ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச்செய்தி
நாளை (01.01.2023) பிறக்கவுள்ள 2023-ஆம் ஆண்டு, மக்களுக்கு மகிழ்ச்சியையும் எல்லா வளங்களையும் தரவேண்டுமென விரும்புகின்றோம். கடந்த ஆண்டில் நாம் தவறவிட்ட செயல்களை இந்த ஆண்டில் செய்துமுடிக்க வேண்டுமென உறுதி ஏற்போம்.
தொழில் துறையிலும் – பொருளாதாரத் துறையிலும் நம்முடைய நாட்டை மேம்படுத்துவதற்கு மத்திய – மாநில அரசுகள் முன்வரவேண்டும். புதிய பாரதம் உதயமாக மாணவர்களும், இளைஞர்களும் தங்களை முழுமனதுடன் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். என கேட்டுக்கொள்வதுடன், அனைத்துத் துறைகளிலும் இந்தியா உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்று உறுதியேற்போம் எனக்கூறி, உலகெங்கும் வாழும் அனைத்து சகோதர – சகோதரிகளுக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எனது உளம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வாழ்த்துக்களுடன்,
டாக்டர். ரவிபச்சமுத்து
தலைவர்
இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)