• பாரதப்பிரதமர் திரு.மோடி அவர்களின் தாயார் மறைவுக்கு IJK தலைவர் டாக்டர். ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் இரங்கல் செய்தி

  பாரதப்பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தாயார் திருமதி ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக இறைவனடி சேர்ந்தார் என்கிற செய்தியறிந்து மிகவும் துயருற்றேன்.

  .நூற்றாண்டினை தொட்ட ஹீராபென் அம்மையார் நமக்கு அளித்த மகத்தான பரிசுதான் நம் பிரதமர் மோடி அவர்கள்.  பிரதமருக்கும் – அவரது தாயாருக்குமான உணர்வுபூர்வமான பந்தமும் – பாசமும் இந்த உலகம் அறிந்தது. ஒரு மனிதன் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் அம்மனிதன் முதலில் கொடுக்கும் முக்கியத்துவமும் – மரியாதையும்  அவரை ஈன்ற தாய்க்குதான் என்பதை அனைவருக்கும் உணர்த்தியர் திரு. மோடி அவர்கள். அவரது தாயாரின்  மறைவு பிரதமருக்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.

  இத்துயரமான சமயத்தில், தன்  தாயாரை இழந்து வாடும் பாரதப்பிரதமர் அவர்களுக்கும் - அவரது குடும்பத்தாருக்கும், என்னுடைய இதயபூர்வமான ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், அம்மையாரின் ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.  

   

  வருத்தங்களுடன்,

  டாக்டர் ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)