• ‘இந்த உலகம் அமைதிபெற வேண்டும் என மானுடனாக அவதரித்தவர் இயேசுபிரான்’ டாக்டர் பாரிவேந்தர் M.P. அவர்கள் விடுத்திருக்கும் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச்செய்தி

   ‘எதிரிகளையும் நேசியுங்கள், பகைவருக்கும் நன்மை செய்யுங்கள்’ என எந்த காலத்துக்கும் போற்றத்தக்க உயர்ந்த அன்பை போதித்த இயேசுபிரான் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடுகின்றோம். அன்பும் அமைதியும் அனைவரது வாழ்விலும் தவழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கோடு இவ்விழா கொண்டாடப்படுவதுடன், அன்பினை பரிமாறிக்கொள்ள ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களையும், ஏழை எளியோருக்கு உதவிகளையும் வழங்கி மகிழ்கின்றனர்.

  ஏழைகளுக்கு விண்ணுலகம் சொந்தம் கனிவுடையவர்களுக்கு நாடு சொந்தம்  தூய்மை உள்ளம் கொண்டவர்களுக்கே கடவுள் சொந்தம் என்ற உபதேசங்களையும்  கொள்கைகளையும் உலகிற்கு அளித்தவர் இயேசுநாதர். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்து, மக்களை நேசித்து – அவர்களுக்காகவே உயிர்த்தியாகம் செய்தவர் அண்ணல் இயேசுபிரான் அவர்கள்.

     இந்த உலகம் அமைதிபெற வேண்டும் என அவதரித்த இயேசுபிரானின்  பிறந்த நாளான இந்த நன்னாளில், வாழ்வில் ஏற்படும் அனத்து துன்பங்களையும், நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் வெற்றிபெரும் வரை தொடர்ந்து போராட வேண்டும் எனக்கூறி, உலகெங்கும் வாழும் அனைத்து கிறித்துவ சகோதர – சகோதரிகளுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். 

   

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி