• இருள் விலகி – ஒளி பரவுவதைப்போல் மக்கள் அனைவரின் வாழ்விலும் தீப ஒளி பரவட்டும் டாக்டர் பாரிவேந்தர் M.P. அவர்கள் விடுத்திருக்கும் -தீபாவளி திருநாள் வாழ்த்துச்செய்தி

    பண்முகம் கொண்ட இந்தியாவில் – சாதி, மதம், இன உணர்வுகளை மறந்து நாம் அனைவருமே இந்தியர்கள்தான் என்பதினை உலகிற்கு உணர்த்தும் உன்னத தினமாக தீபாவளி உள்ளிட்ட பல பண்டிகைகள் திகழ்கின்றது.

    தீபம்‘ என்றால் ஒளி, விளக்கு. ’ஆவளி‘ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். இந்நன்னாளில் இல்லங்கள்தோறும் விளக்கேற்றியதும் இருள் நீக்கி – ஒளி பரவுவதைப்போல் நம் மனதில் உள்ள கோபம் – அகங்காரம் – ஆணவம் – பொறாமை போன்ற தீய எண்ணங்களை  எரித்துவிட்டு, அன்பு – கருணை – ஈகை – விட்டுக்கொடுத்தல் போன்ற நல்ல குணங்களை மனதில் வளரச் செய்து உற்றார் – உறவினர்கள் – நண்பர்களுடன் மகிழ்ச்சியையும் – பல வகையான உணவுகளையும் பகிர்ந்துகொள்வதே இத்தீபாவளி திருநாளின் முக்கிய நோக்கமாகும்.

    நாட்டில் அமைதி பெருகி, பாகுபாடு குறைந்து, நீதி – நேர்மை தழைத்து, அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்று, வளர்ச்சியடைந்த வலிமையான வல்லரசு இந்தியாவை உருவாக்கும் வரை, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் அயராது பாடுபட வேண்டும் எனக்கூறி,  இந்நன்னாளில் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

     

    வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P                            

    நாடாளுமன்ற உறுப்பினர்,

    பெரம்பலூர்  தொகுதி.