• மூத்த வழக்கறிஞரும் – முன்னாள் அட்வகேட் ஜெனரலுமான திரு.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவுக்கு IJK தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் இரங்கல்

  இரங்கல் செய்தி விவரம்

  மூத்த வழக்கறிஞரும் - தமிழக அரசின்  முன்னாள் அட்வகேட் ஜெனரலுமான திரு. ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று (18.10.2022) காலை இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் துயருற்றேன். பார்கவ குல சமுதாய மக்களும் இந்திய ஜனநாயக கட்சியினுடைய நிர்வாகிகளும் அதிர்ச்சியும் – மிகுந்த வருத்தமும் அடைந்துள்ளனர்.

  அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் – உறவினர்களுக்கும் -  நண்பர்களுக்கும் என் சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

   

  வருத்தங்களுடன்,

  டாக்டர் ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி(IJK)