-
மூத்த வழக்கறிஞரும் – முன்னாள் அட்வகேட் ஜெனரலுமான திரு.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவுக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் இரங்கல்
இரங்கல் செய்தி
மூத்த வழக்கறிஞரும் - தமிழக அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரலுமான திரு. ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று காலை இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து, அதிர்ச்சியும் – மிகுந்த வருத்தமும் அடைந்தேன். பார்கவ குல சமுதாயமும் இந்திய ஜனநாயக கட்சியினுடைய தலைவர்களும் தொண்டர்களும் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் – உறவினர்களுக்கும் - நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.
வருத்தங்களுடன்,
டாக்டர் பாரிவேந்தர் M.P
பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர்
நிறுவனர் – IJK.