• மானுடத்தை வழிநடத்தும் மகத்தான போதனைகளை அருளிய மாமனிதர் நபிகள் நாயகம் IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் - மிலாது நபி வாழ்த்துச்செய்தி

  இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த தினம் ‘மிலாது நபி’ திருநாளாக  உலகெங்குமுள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்றது.

  ‘ஏழை, எளிய மக்களுக்கு உணவளியுங்கள்’ என்ற கருணை உள்ளத்துக்குச் சொந்தக்காரரான நபிகள் நாயகம், இரக்கமும், அன்புமிக்க அரவணைப்பும்  கொண்டவர். உயரிய நற்சிந்தனைகள் பல உலகெங்கும் பரவிட தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.

  அகிலம் முழுவதும் மானுடத்தை வழிநடத்தும் மகத்தான போதனைகளை அருளிய மாமனிதர் நபிகள் நாயகம். அவரின் போதனைகளை பின்பற்றி வாழ்வோம் எனக்கூறி, நபிகள் நாயகம் அவதரித்த இந்நன்நாளில் (09.10.2022), உலகமெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர – சகோதரிகளுக்கு, இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் என் உளமார்ந்த மிலாது நபி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

   

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)