• ‘’உயிர்ப்பொருட்கள் - உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும்நீக்கமற இறைப்பொருள் உறைந்துள்ளது”டாக்டர் பாரிவேந்தர் M.P. அவர்கள் விடுத்திருக்கும் - ஆயதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துச்செய்தி

  நவராத்திரி எனப்படும் ஒன்பது நாட்களின் இறுதியில், ஒன்பதாவது நாள் ஆயுத பூஜையாகவும், பத்தாவது நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த திருநாட்களை தமிழக மக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடனும், பக்தியுடனும் கொண்டாடுவது வழக்கம்.

  உன்னதமான  உழைப்பையும், அழிவு இல்லாத கல்வியையும் பறைசாற்றும் விதமாக கொண்டாடும் ‘ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி’  விழாக்கள் உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம் என்னும் நம்பிக்கையை அளித்துவருகின்றது.

  ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. உயிர்ப்பொருட்கள் – உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைப்பொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதமாக அவற்றையும் இறைப்பொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை. இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொழிலையும் – தொழிலாளர்களையும் போற்றும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது.

  இந்த நல்ல நாளில் இந்திய தேசத்திலும் – தமிழகத்திலும் தொழில் வளமும், கல்வி மற்றும் செல்வமும் பெருகி,  மக்கள் எல்லா வளமும் நலமும் பெற, என்னுடைய இதயம் கனிந்த ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்

   

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி