• “அதர்மம் அழிந்து - தர்மம் தழைத்தோங்கட்டும்” IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் - சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்து

    ஒவ்வொரு மனிதர்களுக்கும் இன்றியமையாத கல்வி – செல்வம் – வீரம் ஆகியவற்றிற்கு அதிபதியாக விளங்கும் சரஸ்வதி – லட்சுமி – பார்வதி எனும் முப்பெரும் தேவியர்களை, தூய்மையான உள்ளத்துடனும் – பக்தியுடனும் போற்றி வழிபடும் விழா நவராத்தியாகவும்  தசராவாகவும் நாடு முழுவதும்  கொண்டாடப்படுகிறது. தீய எண்ணங்கள் மற்றும் தீயசக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்ட அசுரர்களை வதம்செய்த அம்மனை பூஜிக்கும் வகையில் இவ்விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    மனிதவள மேம்பாட்டிற்கும் – சமுதாய வளர்ச்சிக்கும் இன்றியமையாதது கல்வி. அந்த கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை போற்றியும், நாம் செய்யும் தொழில்கள் நம்மை வாழவைக்கும் என்பதற்காக  செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை போற்றியும், கெட்டவற்றை நல்லவை வெற்றி கொள்ளும் எனும் தத்துவத்தினை விளக்கும் வீரத்தின் அதிபதியான பார்வதி தேவியை போற்றியும், இத்திருவிழாக்கள்  கொண்டப்படுகின்றது.

    நவராத்திரி திருநாட்களில் ஆயுதபூஜையை தொடர்ந்து வரும் விஜயதசமி அன்று காரியங்கள் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன், இந்நாளில் புதிய முயற்சிகளை தொடங்குவர்.

    இந்நாளில், அதர்மம் எனும் சூழ்ச்சி வலைகளை அறுத்தெறிந்து, தர்மம் தழைத்தோங்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் எனக்கூறி, இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் அனைவருக்கும் எனது உளம்கனிந்த சரஸ்வதி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

     

    வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் ரவிபச்சமுத்து

    தலைவர்

    இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)