• ‘அஹிம்சை’ எனும் வலிமையான ஆயுத்தை பயன்படுத்தி ஆற்றல்மிக்க வெள்ளையரை வெற்றிகொண்டவர் மகாத்மா IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் - காந்தி ஜெயந்தி வாழ்த்து

  இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளாலும் போற்றப்படுபவர் காந்தியடிகள். ரவீந்திரநாத் தாகூரால் ‘மகாத்மா’ என பட்டம் சூட்டப்பட்டு,  இந்திய மக்கள் அனைவராலும்  ‘தேசத்தந்தை’  என அன்போடு அழைக்கப்பட்டவர்.

  அஹிம்சை என்னும் ஆயுதம் ஏந்தி - அறவழியில் போராடி இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டு, ஆற்றல் மிகுந்த வெள்ளையர்களை வெற்றிகொண்டவர். மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான இந்நன்னாளில், (2.10.2022) அண்ணல் காந்தியடிகள் அவர்களின் தியாகங்களையும் நாட்டுப்பற்றையும் நினைவுகூர்ந்து, அவர்தம் போதனைகளை பின்பற்றி வாழ்வோம் எனக்கூறி, அனைவருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் காந்திஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

   

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)