• பெரம்பலூரநாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் M.P. அவர்களின் - காந்தி ஜெயந்தி வாழ்த்துச்செய்தி

  இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டு,  தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டுக்காக அர்ப்பணித்தவர் நமது ‘தேசத் தந்தை’ மகாத்மா காந்தி அவர்கள்.

   

  அவரின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதியை ‘காந்தி ஜெயந்தி’  - யாகக் கொண்டாடுகிறோம். நம் நாட்டின் தேசிய விடுமுறை தினமாகக் கொண்டாடப்படும் இந்நாள், "அனைத்துலக வன்முறையற்ற நாளாக“ (சர்வதேச அஹிம்சை தினம்)  உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

   

  உலகம் போற்றும் உத்தமரான காந்தியடிகள் மண்ணடிமைக்காக மட்டுமின்றி பெண்ணடிமைக்காகவும் குரல் கொடுத்தவர். இந்நாளில் அவரின் கொள்கைகளை பின்பற்றி நம் நாட்டினை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்ல உறுதியேற்போம் எனக்கூறி, உலகெங்கும் வாழும் இந்திய மக்கள் அனைவருக்கும் காந்திஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

   

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் MP

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி