• அகிலம் போற்றும் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் M.P. விடுத்திருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி

  இன்று (17.09.2022) பிறந்தநாள் காணும் பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  திரு. மோடி ஜி அவர்களின் அரசியல் வாழ்வில் முதல்முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றபோதே முதல்வராக பதவியேற்றவர். அதேபோல் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றபோதே இந்திய நாட்டின் பிரதமராக பதவியேற்ற பெருமைக்குரியவர்.

  சவாலான நேரங்களிலும் எந்தவித  தொய்வும் அடையாமல் சிறப்பானதொரு தலைமையை வழிநடத்தி, மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இந்திய நாட்டை உருவாக்கும் பிரதமரின் அரசியல் பயணம் முன்னெப்போதையும் விட அவருக்கு வெற்றியைத் தரவும், நீண்ட ஆயுளுடனும் – ஆரோக்கியத்துடனும் இருந்து இந்திய நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லவும் இறைவன் அருள் எப்போதும் அவருக்கு துணையிருக்கும் எனக்கூறி, மீண்டுமொருமுறை பிரதமர் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

   

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி

  நிறுவனர் - இந்திய ஜனநாயகக் கட்சி(IJK)