-
பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் M.P. அவர்களின் - ஓணம் திருநாள் வாழ்த்துச்செய்தி
ஓணம் பண்டிகை இந்தியாவின் தென்தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும்.
சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் எனவும் அழைக்கின்றார்கள். அன்றைய தினத்தில் மகாபலி மன்னன் தங்கள் இல்லம் தேடி வருவார் என்ற நம்பிக்கையுடனும் மலையாள மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அன்பு, ஒற்றுமை, அமைதி, சகிப்புத் தன்மை, சகோதர நேயம், பகிர்ந்துண்ணும் பண்பு முதலிய குணங்கள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பதை, ஓணம் திருநாள் மனித சமுதாயத்திற்கு உணர்த்துகிறது. இத்தருணத்தில் உலகெங்கும் வாழும் மலையாள சகோதர – சகோதரிகளுக்கு என் இனிய திருவோணம் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வாழ்த்துக்களுடன்,
டாக்டர் பாரிவேந்தர் M.P
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி.