-
தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் மறைவு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் - டாக்டர் பாரிவேந்தர் M.P., இரங்கல்
விவசாயக் குடும்பத்தில் பிறந்த நெல்லை கண்ணன் அவர்கள், தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழ் இலக்கியத்தை கற்றுத் தேர்ந்தவர். தனது பேச்சாற்றல் மூலம் பல பட்டிமன்றங்களில் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டவர்.
இலக்கியவாதியாகவும், பேச்சாளராகவும் புகழ்பெற்ற நெல்லைக் கண்ணன், 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் காமராஜர் உட்பட பல்வேறு தலைவர்களுடன் பயணித்தவர்.
அரசியலில் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி இவரை ஈர்த்தது. 1996 ல் நடந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டார். பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியனார். தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதை சமீபத்தில் பெற்றார்.
திருநெல்வேலி டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த அவர் இன்று (18.08.2022) உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி தமிழ் இலக்கியவாதிகளுக்கு பேரிழப்பாகும்.
நெல்லை கண்ணன் அவர்களை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
வருத்தத்துடன்,
டாக்டர் பாரிவேந்தர் M.P,
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி.