-
இந்திய நாட்டின் பண்பாட்டையும் – பாரம்பரியத்தையும் காத்திட நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும் IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் - சுதந்திர தின வாழ்த்து
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் பல்வேறு ஜாதி – மத – இன – மொழி வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் இநதியர்கள்தான் என்ற அசைக்க முடியாத ஒற்றுமை வேண்டும்.
இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்திருக்கும் நம் இந்திய தேசத்தில் அந்நிய சக்தியின் நிழல்கூட தொட அஞ்சும் அளவிற்கு பெரும் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவினை மிகுந்த உற்சாகத்துடனும் ஒற்றுமையுடனும் கொண்டாடி வருகின்றோம்.
தேச ஒற்றுமை – இறையாண்மை ஆகியவற்றை பேணி காத்து, பல்வேறு துறைகளில் உள்ள ஊழல்களை களைந்திட நாம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.
வருங்கால இந்தியாவில் ஜாதி – மத – இன – மொழி வேறுபாடுகளை கலைந்து, பண்பாடு – பாரம்பரியம் – கலாச்சாரம் – மனித நேயம் ஆகியவற்றை வீரியம் குறையாமல் பேணி காத்திட, நாம் அனைவரும் இந்தியன் என்ற பெருமையுடன் தொடர்ந்து பாடுபட வேண்டும் எனக்கூறி உலகெங்கும் வாழும் இந்தியர்களுக்கு, இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் எனது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வாழ்த்துக்களுடன்,
டாக்டர் ரவிபச்சமுத்து
தலைவர்
இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)