• பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் M.P. அவர்களின் - சுதந்திர தின வாழ்த்துச்செய்தி

  75-வது சுதந்திர தினமாம் அமுத பெருவிழாவை (Azadi Ka Amrit Mahatsav) இந்த ஆண்டு கொண்டாடி வரும் இந்நாளில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின்  சுதந்திரப் போராட்ட வரலாற்றில், நாட்டின் விடுதலைக்காக உயிர் நீத்த தியாகிகளை என்றும் நினைவில் நிறுத்தவேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

   

  விடுதலை பெற்ற நமது நாடு பல்வேறு துறைகளிலும், உலகமே வியக்கும் வண்ணம் முன்னேற்றம் கண்டு வருகிறது. முன்னேற்றப் பாதையில் நாடும் – நாட்டு மக்களும் தொடர்ந்து பயணிக்க நாம் அனைவரும் ஒற்றுமையோடு, சகோதர உணர்வுடன் இருக்க வேண்டும்.

   

  நமது எதிர்கால இளையதலைமுறையின் கல்வி – வேலை வாய்ப்பு –  நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து, மிகச்சிறந்த  வலிமையும் – வளமையும் கொண்ட நாடாக இந்தியா திகழ பாடுபடுவோம். எனக்கூறி, அனைவருக்கும் இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

   

   

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி