• இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநிலம் தழுவிய அறவழி ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி

  இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் இன்று (04.08.2022  வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  இன்று (04.08.2022) காலை 11.00 மணிக்கு, சென்னையில் நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில்,  கட்சியின் தலைவர்  டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் தலைமையில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  Ø மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்,

  Ø  சாமானிய மக்களை பாதிக்கும் அரிசி மற்றும் பால்பொருட்களுக்கான GST வரிவிதிப்பை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  சென்னையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.பி.ஜெயசீலன், துணை பொதுச்செயலாளர் திரு.எம்.ரவிபாபு, செய்தி தொடர்பாளர் திரு.பிரவீன் காந்த், மக்கள் தொடர்பு அலுவலர் திருமதி A.B.லதா, வழக்கறிஞரணி செயலாளர் K.R.பாலாஜி, மற்றும் சென்னை – காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட மாநில – மண்டல - மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

  இதேபோல் தமிழகம் முழுவதும் இன்று இக்கோரிக்கைகளை வலியுறுத்தி. திருச்சி – கோவை - சேலம் – நாமக்கல் – விழுப்புரம் (திருக்கோவிலூர்) – பெரம்பலூர் -  அரியலூர் - தஞ்சாவூர் – புதுக்கோட்டை – மதுரை – தேனி – திண்டுக்கல் – திருப்பூர் -  தூத்துக்குடி – கரூர் – சிவகங்கை – மதுரை – சிவகங்கை – வேலூர் – திருப்பத்தூர் – ராணிப்பேட்டை - தருமபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்தது.