• நாளை IJK-வின் மாநிலம் தழுவிய அறவழி ஆர்ப்பாட்டம் கட்சி நிர்வாகிகள் பெருமளவில் கலந்துகொள்ள கட்சியின் தலைவர் - டாக்டர் ரவிபச்சமுத்து அழைப்பு.

  இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் நாளை (04.08.2022  வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

  அவ்வகையில், சென்னையில் நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில்நாளை (04.08.2022) காலை 11.00 மணிக்கு, கட்சியின் தலைவர்  டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் தலைமையில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

  • மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்,
  • சாமானிய மக்களை பாதிக்கும் அரிசி மற்றும் பால்பொருட்களுக்கான GST வரிவிதிப்பை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

  சென்னையில் நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.பி.ஜெயசீலன், துணை பொதுச்செயலாளர் திரு.எம்.ரவிபாபு, செய்தி தொடர்பாளர் திரு.பிரவீன் காந்த், மக்கள் தொடர்பு அலுவலர் திருமதி A.B.லதா மற்றும் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட மாநில மண்டல - மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

  இதேபோல் தமிழகமெங்கும் IJK சார்பில் மாநிலம் தழுவிய அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்திய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பொதுமக்களும் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருமளவில் கலந்துகொண்டு இக்கோரிக்கைகள் நிறைவேறவும் ஆர்ப்பாட்டம் வெற்றிபெறவும் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

   


  இங்ஙனம்,

  கட்சித் தலைமையகம்

  இந்திய ஜனநாயகக் கட்சி  (IJK).