• பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 300 மாணவர்களுக்கு SRM பல்கலைக்கழகத்தில் 4-வது ஆண்டாக இலவச உயர்கல்வி வழங்கப்படும் - டாக்டர் பாரிவேந்தர் M.P, அறிவிப்பு

  கடந்த 2019  நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் – இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமான டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2019-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று வருடங்களாக பொறியியல், கலை-அறிவியல்,

  நல அறிவியல், விவசாயம், உணவக மேலாண்மை  போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளில்,  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 900 மாணவ - மாணவியர் SRM பல்கலைக்கழகத்தில் இலவச உயர்கல்வி பயின்று பயனடைந்து வருகின்றனர்.

   

  இதன் தொடர்ச்சியாக, 4-வது ஆண்டாக இந்த கல்வியாண்டும், (2022-23) 300 மாணவர்களுக்கான இலவச உயர்கல்வி பயில்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வருகின்ற 3-ஆம் தேதி (03.08.2022)  காலை 11.00 முதல் 12-ஆம் தேதி (12.08.2022) மாலை 6.00 மணிக்குள், ஏழ்மை நிலையிலுள்ள - தகுதியுள்ள மாணவர்கள் www.srmist.edu.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்

   

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.