• பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களுடன் - IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்கள் சந்திப்பு

  187 நாடுகள் பங்கேற்கும்  44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  1927 முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்தப் போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெற உள்ளது.

   

  வரலாற்று சிறப்புமிக்க இப்போட்டியினை துவக்கிவைத்து நமது பாரதப்பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் விழாவிற்கு மேலும் சிறப்பினை சேர்த்தார்.  இவ்விழாவினை சிறப்பிக்க தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும் பாரதப்பிரதமர் அவர்களை மரியாதை நிமித்தமாக நமது இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்கள் நேற்று நேரில் சந்தித்தார்.

   

  இங்ஙனம்,

  கட்சித் தலைமையகம்

  இந்திய ஜனநாயகக் கட்சி  (IJK)