• பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்குஉரிய நியாயம் கிடைக்க வேண்டும் - IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல்

  கடலூர் மாவட்டம்வேப்பூர் வட்டம்பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் - செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி - கள்ளக்குறிச்சி மாவட்டம்சின்ன சேலம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி

  12-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், ஜூலை 13-ஆம் தேதி காலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனையும் – வருத்தமும்  அடைகின்றோம். 

  பெற்றோர்களிடம் மகள் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறினாலும், மாணவியின் உடலில் சந்தேகத்திற்கிடமான வகையில் காயங்களும்  - இரத்தக் கறைகளும் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  இவ்வழக்கினை நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டு தவறிழைத்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திஉரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, மாணவியை இழந்து வாடும் பெற்றோருக்கும் - உறவினர்களுக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம். 

   

  வருத்தங்களுடன், 

  டாக்டர் ரவிபச்சமுத்து 

  தலைவர்  

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)