குடியரசு தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி அன்று குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட திருமதி திரௌபதி முர்மு அவர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று இந்திய நாட்டின் 15-வது குடியரசு தலைவராக பொறுப்பேற்க உள்ளார்
20 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக மற்றும் பொதுசேவையாற்றி வரும் திரௌபதி முர்மு அவர்கள், ஒரு கவுன்சிலராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, மாநில சட்டமன்ற உறுப்பினர் – அமைச்சர் – ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநர் என்று படிப்படியாக வளர்ந்து தற்போது இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று, சாதனை படைத்து பெண் இனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்கின்றார்.
குடியரசு தலைவராக பொறுப்பேற்க உள்ள திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு, அவரின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வாழ்த்துக்களுடன்,
டாக்டர் பாரிவேந்தர் M.P
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி
Powered by iPOT Technologies