-
பொதுசேவையால் தானும் உயர்ந்து தன் இனத்தையும் பெருமைபடுத்தியவர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள்’ நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு - IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்கள் வாழ்த்து -
தற்போது குடியரசு தலைவராக பொறுப்பிலிருக்கும் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அடுத்த தலைவராக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக திருமதி திரௌபதி முர்மு அவர்கள் குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்றுள்ளார்.
திருமதி. திரௌபதி முர்மு அவர்கள் பழங்குடி இனத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து ஆசிரியராக தன்னுடைய பணியை துவங்கியவர். அவருடைய அரசியல் பாதையானது பஞ்சாயத்து கவுன்சிலர் – அமைச்சர் – ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநர் என படிப்படியாக உயர்ந்து தற்போது நாட்டின் முதல் குடிமகள் என்ற உயரிய பதவியை அடைந்துள்ளார்.
தன்னுடைய சமூக பணியாலும் – பொதுவாழ்க்கையில் அவருடைய சேவையாலும் இத்தகைய உயர்ந்த பதவியை அடைந்த திருமதி திரௌபதி முர்மு அவர்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற புகழையும் – நாட்டின் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அரசியல் பொதுசேவையில் தானும் உயர்ந்து, தன் இனத்தையும் பெருமைபடுத்தி, பெண் இனத்திற்கு ஓர் முன்மாதிரியாக திகழும், திருமதி திரௌபதி முர்மு அவர்களின் பணி சிறக்க இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வாழ்த்துக்களுடன்,
டாக்டர் ரவிபச்சமுத்து
தலைவர்
இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)