• IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் - ‘ரமலான்’ திருநாள் வாழ்த்துச்செய்தி

    ரமலான் இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். ஏழ்மையை அறிந்து கொள்ளவும், பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளவும், உடல் நலத்தை பேணிக்காத்து மனிதர்களை மேம்படுத்துவதுதான் புனித ரமலான் நோன்பின் சிறப்பாகும்.

    நோன்பு நிறைவு பெறும் நன்நாளில் முகமது நபி போதித்த சமத்துவம், சுய கட்டுப்பாடு, நல்லொழுக்கம், அன்பு, பரிமாற்றம், ஒற்றுமை, சமாதானம் ஆகியவற்றை கடைபிடிப்போம்

    இந்நன்னாளில் இறை தூதரான அண்ணல் முகமது நபிகள் நாயகம் அவர்கள் இவ்வுலகுக்கு உணர்த்திய அனைத்து நன்னெறிகளையும் சாதி – மத பேதமின்றி அனைவரும் கடைபிடித்து உலகில் ஒற்றுமை தழைத்தோங்கவும் – வன்முறைகள் ஒழிந்து, உலகில் அமைதியும் – மத நல்லிணக்கமும் உருவாக  நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபடவேண்டும் என வலியுறுத்தி  உலகெங்கும் வாழும் அனைத்து இஸ்லாமியர்களுக்கு எனது உளம் கனிந்த புனித ரம்ஜான் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

     வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் ரவி பச்சமுத்து

    தலைவர்

    இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)