• ‘அன்பு ஒன்றே அனைவரையும் வெற்றி கொள்ளும் ஆயுதம்” டாக்டர் பாரிவேந்தர் M.P. அவர்கள் விடுத்திருக்கும் - ரம்ஜான் வாழ்த்துச்செய்தி

  இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனை தொழுது, இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

  அன்பு ஒன்றே அனைவரையும் வெற்றி கொள்ளும் ஆயுதம். அனைத்து சமயத்தினரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக பரிவுடன் சகோதரத்துவத்தை வளர்ப்பதுதான் இந்திய நாட்டின் ஜனநாயத்தைக் காக்கும் அரணாக அமையும்.

  இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாம் மார்க்கத்தை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் என்னுடைய இதயமார்ந்த ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர்

  நாடாளுமன்ற உறுப்பினர்,

  பெரம்பலூர்  தொகுதி.