• ‘தொழிலாளர்களின் உழைப்பே உலகத்தின் மூலதனம்’ IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் - ‘மே’ தின வாழ்த்துச்செய்தி

  ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உலகிலுள்ள மனித குலம் முழுவதும் கொண்டாடும் நாள் மே தினமாகும்.  உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பே உலகத்தின் மூலதனமாகும்.

  வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றால் ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்து ஒரு சிலர் சுக வாழ்வு நடத்துவதும், மிகப் பலர் வறுமையில் வாடவுமான நிலை ஏற்படுகின்றது.   இந்த நிலை மாறி, சமுதாயத்தில் அனைவருக்கும் கல்வி கிடைக்கவும் - வேலை வாய்ப்பு கிடைக்கவும் அவற்றின் மூலம் அனைவருக்கும் சமவாய்ப்பு அமையவும் இந்த மே தின நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம் எனக்கூறி,  உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் தோழர்களுக்கு என் இனிய மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)