-
வருத்தங்களுடன், டாக்டர் பாரிவேந்தர் M.P பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி
அதிகாலை முதல் அந்தி சாயும் வரை கணக்கில்லாமல் வேலை செய்ய வேண்டும் என்பதை எதிர்த்தும், எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தியும் எழுந்த போராட்டத்தின் வெற்றி தினமே ‘மே’ தினம் எனப்படும் சர்வதேச தொழிலாளர்கள் தினம். உழைப்புக்கேற்ற ஊதிய மின்மை, கொத்தடிமைத் தனமான இன்னல்கள் ஆகியவற்றில் இருந்து தொழிலாளர்களுக்கு விடுதலை கிடைத்த மகத்தான நாளை உழைப்பாளர்கள் தினமாக கொண்டாடி வருகின்றோம். எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேர ஓய்வு ஆகியவற்றை குறிப்பதாகும்.
இந்த மே தின நன்னாளில், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்; உழைப்பவரை உயர்த்துவோம் என்ற உறுதியை மேற்கொண்டு, தினக்கூலி அடிப்படையில் பணிபுரிபவர்கள் - ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரும் உரிய பயன்களை அடையக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் எனக்கூறி, உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்வில் வளமும், நலமும் கொழிக்கட்டும் என்று வாழ்த்தி, எனதருமை தொழிலாளப் பெருமக்களுக்கு எனது ‘மே’ தின நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன்,
டாக்டர் பாரிவேந்தர் M.P
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி.